News September 9, 2024
மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரத்தில் இன்று அறிக்கை தாக்கல்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படுகிறது. 3 நாட்களாக விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் இன்று தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கிறார். அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய மகாவிஷ்ணு ஏற்கனவே கைதான நிலையில், இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தெரியவரும்.
Similar News
News September 16, 2025
பிரான்ஸ் மாகாணத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டின் வால் டி லாயர் மாகாணத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
கையெழுத்திடப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
News September 16, 2025
சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இருக்காது…

2050-ஆம் ஆண்டுக்குள் சென்னைக்கு தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு குடிநீர் தேவைப்படும். இதற்காக நீர் வளத்துறை (WRD) ஒரு பெரிய திட்டம் செயல்படுத்த உள்ளது. அதன்படி ஏரிகள், குளங்களை சரி செய்யவும், புதிய நீர்த்தேக்கங்கள் கட்டவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் ரூ.14,000 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் சென்னையின் தண்ணீர் தேவையை சமாளிக்க உதவும். ஷேர் பண்ணுங்க
News September 16, 2025
சென்னை சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, சென்னை கமிஷனர்- 044-23452320, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்