News September 9, 2024
கிருஷ்ணகிரியில் தீவிர கண்காணிப்பு

கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர்.இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லாமலிருக்க தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
கிருஷ்ணகிரியில் கடன் தீர்க்கும் கணபதி!

கிருஷ்ணகிரி, பாகலூரில் அமைந்துள்ளது அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில். இங்கு மூலவரான விநாயகர் ஆவுடை மீது வலது கையில் உடைந்த தந்ததுடனும் இடது கையில் கொழுக்கட்டையுடன் அருள்பாலிக்கிறார். கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவரை ‘கடன் தீர்க்கும் கணபதி’ என அழைக்கின்றனர். ஷேர்!
News August 27, 2025
ஓசூரில் பைக்கில் மெதுவாக செல்ல சொன்னவர் கொலை!

கிருஷ்ணகிரி, ஓசூர், தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த வெங்கட்ராஜ் (32) வசிக்கும் தெரு வழியாக, 15 வயது சிறுவன் அடிக்கடி பைக்கில் வேகமாக சென்றதால், வெங்கட்ராஜ் சிறுவனை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளார். இதில் நவீன்ரெட்டி, அஸ்லம், 15, 18 வயது சிறுவன் என நான்கு பேரை நேற்று (ஆகஸ்ட் 26) போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 5 பேரை தேடி வருகின்றனர்.
News August 27, 2025
இந்த விநாயகர் சதுர்த்தியை way2news உடன் கொண்டாடுங்கள்

உங்கள் பகுதியில் வைத்திருக்கும் வண்ண வண்ண விநாயகர் சிலையை ஊர் அறிய செய்ய அருமையான வாய்ப்பு. அலங்கரித்து வைப்பட்டுள்ள விநாயகர் சிலையை தெளிவாக புகைப்படம் எடுத்து நம்ம way2newsல் பதிவிடுங்கள். எப்படி பதிவிடுவது என்பதை <