News September 8, 2024

செங்குன்றம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

image

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி பகுதியில் இன்று சாலை தடுப்பில் வாடகை கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கார் ஓட்டுநர் மற்றும் காரில் பயணித்த தாய், மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், தந்தை, மகன் ஆகியோர் படுகாயமடைந்து செங்குன்றம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News

News September 10, 2025

திருவள்ளூர் மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

திருவள்ளூர் மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

News September 10, 2025

திருவள்ளுர்: தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

image

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் சந்திப்பில்ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வரும் தனுஷ்நாத் என்பவர் கடந்த 7ம் தேதி பணியில் இருந்த போது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மூளை சாவு அடைந்தார். இதையடுத்து குடும்பத்தினர் ஒப்புதலின்படி, அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், கருவிழிகள் மற்றும் இதய வால்வுகள் தானமாக வழங்கப்பட்டன.

News September 10, 2025

திருவள்ளூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனகூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930க்கு புகாரளிக்கலாம்)

error: Content is protected !!