News September 8, 2024
அப்பா கொடுத்த உற்சாகம்தான் வெற்றிக்கு காரணம்: துளசிமதி

சொந்த ஊருக்கு (காஞ்சிபுரம்) திரும்பிய துளசிமதி முருகேசன், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சொந்த ஊரில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததாகவும், சிறு வயதில் இருந்தே பெற்ற பயிற்சியும், தனது அப்பா கொடுத்த உற்சாகமும்தான் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார். மேலும், உடல் ஒத்துழைக்காததால் வெள்ளி பதக்கம் வென்றேன் அடுத்த பாராலிம்பிக்ஸில் தங்க பதக்கம் வெல்வேன் எனத் தெரிவித்தார்.
Similar News
News August 24, 2025
காஞ்சிபுரம்: காவல்துறையில் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் இளைஞர்களே, தமிழக காவல்துறையில் ( Police Constables, Jail Warders & Firemen) காலியாக உள்ள 3,644 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18- 31 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 24, 2025
காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக.25-ம் தேதி காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறும் என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து மனு அளிக்கலாம். இது போன்ற முக்கிய அறிவிப்புகளை SHARE பண்ணுங்க.
News August 24, 2025
கஞ்சா விற்ற 3 பேர் கைது

காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முஸ்தபா, இம்தியால், ஹேமநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.