News September 8, 2024
மம்முட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் ‘Dominic and The Ladies purse’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இரவு உடையுடன், பெண்கள் பயன்படுத்தும் பர்ஸை கையில் வைத்துக் கொண்டு மம்முட்டி போஸ் கொடுக்கிறார். பின்னனியில் சிலரின் புகைப்படங்கள் மார்க் செய்யப்பட்டுள்ளது. அதன் அருகில் ஜேம்ஸ்பாண்ட் பட போஸ்டர் உள்ளதால், துப்பறியும் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 22, 2025
துரோகம் செய்த நடிகர்: டைவர்ஸ் கேட்கும் மனைவி

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தா- சுனிதா தம்பதியர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண பந்தத்தில் 37 ஆண்டுகள் இணைந்திருந்த நிலையில், இளம்நடிகை ஒருவருடன் கோவிந்தா நெருங்கிப் பழகுவதாக தகவல் வெளியானதிலிருந்து கருத்து வேறுபாடு தோன்றியுள்ளது. இந்நிலையில், சுனிதா விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. திரைத்துறையில் விவாகரத்து அதிகரிக்க என்ன காரணம்?
News August 22, 2025
திங்கள்கிழமை பள்ளி மாணவர்களுக்கு.. HAPPY NEWS

+1 துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் ஆக.25 பிற்பகலில் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம் என அரசு அறிவித்துள்ளது. SHARE IT.
News August 22, 2025
TechTalk: WiFi Speed குறையுதா? நீங்களே சரி செய்யலாம்

வீட்ல இருக்க சில பொருட்கள், உதாரணத்துக்கு கண்ணாடி, இரும்பு மரச்சாமான், நீர் நிரப்பிய பெரிய குடுவைகள், ப்ளூடூத் சாதனங்கள், இதெல்லாம் WiFi சிக்னலை தடுக்குமாம். இதனால் இன்டர்நெட் வேகம் குறையலாம்னு Experts சொல்றாங்க. இதுக்கு எளிய தீர்வு என்னன்னா, WiFi Router-ஐ வீட்டின் நடுப்பகுதியில், உயரமாக, திறந்த இடத்தில் வைத்து பார்க்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.