News September 7, 2024

புதுவையில் சி.சி.டி.வி. பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுவை லெனின் வீதியில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சி.சி.டி.வி. கேமிரா அமைத்தல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 14ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மேலும் விபரங்களுக்கு 90434 89659, 0413 2246600 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News September 15, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News September 15, 2025

புதுச்சேரி பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை!

image

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சட்டசபையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி மற்றும் காரைக்காலச் சார்ந்த 120 பத்திரிக்கையாளர்களுக்கு புதுச்சேரி அரசின் அங்கீகார அடையாள அட்டையை வழங்கி கௌரவித்தார் நிகழ்ச்சியில் செய்திதுறை இயக்குனர் முனுசாமி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

News September 15, 2025

காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

புதுச்சேரி அரசு துணை நிலை ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாதம் தோறும் 15 ஆம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் குறைதீர் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!