News September 7, 2024
உலகளவில் I-PHONE முதலிடம்

உலகளவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் IPhone முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15, 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம் உலக சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் IPhone 25% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. தென்கொரியாவின் சாம்சங் 21% பங்களிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
Similar News
News August 22, 2025
SPACE: விண்வெளியில உங்க உடலுக்கு என்னாகும் தெரியுமா?

பூமில இருந்து உணவ விண்வெளிக்கு எடுத்துட்டு போய் அங்க சாப்பிட்டா அந்த உணவோட ஒரிஜினல் சுவையும் வாசனையும் வித்தியாசமா இருக்குன்னு ஆய்வுல தெரியவந்துருக்கு. விண்வெளியில gravity கம்மியா இருக்குறதுனால, மனித உடல்ல இருக்க திரவங்கள் தலையை நோக்கி நகருமாம். இதனால, உடல்ல இருக்க சுவை, வாசனை உணர்வுகள் பாதிக்கப்படுதாம். இதனால உணவோட சுவை மற்றும் வாசனை விண்வெளியில வேற மாதிரி இருக்குறதா ஆய்வுகள் சொல்லுது.
News August 22, 2025
மீண்டும் குண்டை தூக்கி போட்ட அமித்ஷா..!

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி ஆட்சிதான் என அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்பது EPS-ன் கருத்து. இந்த மோதல்போக்கு சில காலம் தணிந்திருந்த சூழலில், நெல்லையில் பேசிய அமித்ஷா மீண்டும் குண்டை தூக்கி போட்டுள்ளார். கூட்டணி ஆட்சிதான் அமையும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News August 22, 2025
உலக சாதனை படைத்த பிரீட்ஸ்கி

ODI-யில், அறிமுகமான முதல் 4 போட்டிகளிலும் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை, தென்னாப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி படைத்துள்ளார். முதல் போட்டியிலேயே சதம் அடித்த (150 vs NZ) அவர், அதன்பின் 83 vs பாக்., 57 vs ஆஸி., 88 vs ஆஸி (நேற்று) என 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன், இந்தியாவின் நவ்ஜோத் சிங் சித்து அறிமுகமானவுடன் தொடர்ந்து 4 அரை சதங்கள் (ஆனால் 5 போட்டிகள்) அடித்திருந்தார்.