News September 7, 2024
48,969 பேர்: சேலம் கலெக்டர் தகவல்

சேலம் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் செப் 10 முதல் செப்.24 வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 26,478 பள்ளி மாணவ, மாணவிகளும், 13,273 கல்லூரி மாணவ, மாணவிகளும், 1,737 மாற்றுத்திறனாளிகளும், 1,246 அரசு அலுவலர்களும், 6,235 பொதுமக்களும் என மொத்தம் 48,969 நபர்கள் பதிவுச் செய்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
சேலம் அருகே விபத்து ஒருவர் பலி!

சேலம் இரும்பாலை அருகே அழகு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பும்போது இரும்பாலை அருகே வந்தபோது தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
News November 12, 2025
சேலம்: 24 விடுமுறை வெளியான அறிவிப்பு!

சேலம் 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது அதன்படி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை அனைத்து விடுமுறை நாட்கள் கணக்கில் கொண்டு 24 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூன்று நாட்கள் சனிக்கிழமை ஆகவும் இரண்டு நாட்கள் ஞாயிற்றுக்கிழமை ஆகவும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!
News November 12, 2025
சேலத்தில் 89 பேர் அதிரடி கைது!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகையை ஆந்திரா மாநில அரசு தருவதை போல உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாற்றும் மறியலில் ஈடுபட்ட 89 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


