News September 7, 2024
குமரியில் வாழை இலை கடும் உயர்வு

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது இதையொட்டி நாளையும் நாளை மறுநாளும் சுப முகூர்த்த தினங்களாக உள்ளது. இதனால் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட், அப்பா மார்க்கெட் ஆகியவற்றில் வாழை இலையின் விலை உயர்வு இரண்டு மடங்காக உள்ளது. கடந்த வாரம் 150 இலைகள் கொண்ட ஒரு கட்டு 600 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் இன்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News November 11, 2025
அஞ்சல் ஊழியர் மூலம் உயிர்வாழ் சான்றிதழ் – அதிகாரி தகவல்

குமரி கோட்டத்தில் தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாக வங்கி மற்றும் இதர சேவைகளை வழங்கி வருகின்றது. எனவே மத்திய அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள்,குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் இன்று கூறினார்.
News November 11, 2025
குமரியில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பட்டியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி இரவு ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது. டிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர்கள் எஸ்ஐபி இந்த ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் இன்று ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளின் பட்டியல்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இவர்கள் இன்று இரவு முழுவதும் விடிய விடிய ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
News November 10, 2025
குமரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் விண்ணப்பம் விபரம்

குமரி சட்டமன்ற தொகுதியில் 2,81,793, நாகர்கோவில் தொகுதியில் 2,07,186, குளச்சல் தொகுதியில் 2.49,733, பத்மநாபபுரம் தொகுதியில் 2,27,417, விளவங்கோடு தொகுதியில் 2,343,43, கிள்ளியூர் தொகுதியில் 2,43,346 என மொத்தம் 14,43,818 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 90.64 சதவீதம் ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.


