News September 7, 2024

10 ஆண்டுகளில் இந்தியா 92.38% வளர்ச்சி: IMF

image

இந்தியா கடந்த 10 ஆண்டில் 92.38% வளர்ச்சி கண்டிருப்பதாக IMFஇன் வேர்ல்ட் எகனாமிக் அவுட் தரவு தெரிவிக்கிறது. அதில், 2013-23 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியில் 11ம் இடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதுவே உலகில் மிக வேகமான வளர்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது. இதே 10 ஆண்டில், USA 62.06%, சீனா 83.50%, ஜெர்மனி 19.38%, ஜப்பான் 19.18% வளர்ச்சி அடைந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News August 22, 2025

சில்லித்தனமான செயல்களில் திமுக ஈடுபடாது: பி.மூர்த்தி

image

தவெக மாநாட்டுக்கு அமைச்சர் பி.மூர்த்தி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா மேடையிலேயே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய மூர்த்தி, தவெக மாநாட்டுக்கு தாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை என கூறியுள்ளார். சேர் கொடுக்க மறுப்பது, வாய்க்கால் தோண்டுவது போன்ற எந்தவித சில்லித்தனமான செயல்களிலும் திமுகவினர் ஈடுபட மாட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.

News August 22, 2025

BREAKING: விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

image

தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அத்துறையின் ஆணையர் பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தில், VPRC, PLF மூலமாக தூய்மை பணியில் ஈடுபடுவோருக்கு வாரம் ஒருமுறை சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர்கள் நீண்ட நாள்களாக இக்கோரிக்கையை அரசுக்கு வைத்திருந்தனர்.

News August 22, 2025

பெண்களை ஏளனமாக பேசும் திமுக அமைச்சர்கள்: நயினார்

image

விருதுநகரில் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முறையிட்ட பெண்களிடம், ‘கம்மல் இருந்தால் ₹1,000 தர முடியாது’ என அமைச்சர் <<17480686>>KKSSR<<>> பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், திட்டங்களை தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாக பேசுவது கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இதற்கு அமைச்சர், தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!