News September 6, 2024
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் மூலம் விவசாயிகள் விவசாய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தனி நபர் பட்டதாரிகள் தொழில் முனைவோராக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன் அடையலாம்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
விருதுநகர் மாவட்டம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1985
▶️ மக்கள் தொகை: 19.43,309 (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 7
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 16,09,224
▶️ இந்தியாவின் 70% பட்டாசு உற்பத்தி இங்கு தான் நடைபெறுகிறது.
▶️ இந்தியாவின் மொத்த டைரிகளில் 30% உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News August 23, 2025
விருதுநகரில் பயிர் கடன் வழங்கல் தொடர்பான கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் பயிர் கடன் வழங்குவது தொடர்பான நெறிமுறைகள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
News August 23, 2025
தமிழ்ச் செம்மல் விருது பெற ஆட்சியர் அழைப்பு

விருதுநகரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் 25.08.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்படிவத்தினை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.