News September 6, 2024

1,519 இடங்களில் மட்டும் விநாயகர் சிலை வைக்க அனுமதி

image

தமிழகம் முழுவதும் நாளை (செப்.7) விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 16,500 போலீசார் மற்றும் 2,000 ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், சென்னையில் 2,000 மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1,519 விநாயகர் சிலைகள் அமைப்பதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

Similar News

News September 16, 2025

20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்

image

நெல்லை-சென்னை இடையே 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் 20 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. பயணிகளின் வருகை அதிகரிப்பால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

News September 16, 2025

பிரான்ஸ் மாகாணத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

image

பிரான்ஸ் நாட்டின் வால் டி லாயர் மாகாணத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
கையெழுத்திடப்பட்டது.  சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

News September 16, 2025

சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இருக்காது…

image

2050-ஆம் ஆண்டுக்குள் சென்னைக்கு தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு குடிநீர் தேவைப்படும். இதற்காக நீர் வளத்துறை (WRD) ஒரு பெரிய திட்டம் செயல்படுத்த உள்ளது. அதன்படி ஏரிகள், குளங்களை சரி செய்யவும், புதிய நீர்த்தேக்கங்கள் கட்டவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் ரூ.14,000 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் சென்னையின் தண்ணீர் தேவையை சமாளிக்க உதவும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!