News September 6, 2024
லியானர்டோ டாவின்சி பொன்மொழிகள்

*ஞானம் இல்லாத ஒரு புத்திசாலி மனிதன், வாசனை இல்லாத ஒரு அழகான பூவைப் போன்றவன். *மற்றவர்களின் வார்த்தைகளை விட அனுபவமே ஒரு உண்மையான வழிகாட்டியாகும்.*நான் ஏழை இல்லை. அதிகமாக ஆசைப்படுபவர்களே ஏழைகள். *யார் மீதும் நம்பிக்கை வைக்காதவன் ஒருபோதும் ஏமாறமாட்டான். *மனிதன் உண்மையிலேயே மிருகங்களின் அரசன்தான், ஏனெனில் அவனின் கொடூரத்தனம் மிருகங்களையே மிஞ்சியது. *ஒழுக்கமே நமது உண்மையான செல்வம்.
Similar News
News July 11, 2025
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்

இறந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, 12 மணிநேரத்துக்கு பின் உயிரோடு எழுந்தால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவில், ஒரு பெண்ணுக்கு 7-வது மாதமே குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த ஹாஸ்பிடலில் குழந்தையை இரவு முழுவதும் ICU-வில் வைத்து கண்காணித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையை புதைக்க மாஸ்க்கை விலக்கிய போது, அசைவு தெரிந்தது. உடனே குழந்தையை வேறொரு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
News July 11, 2025
லோகேஷ் மீது கோபம்: சஞ்சய் தத்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக உள்ளதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். ‘கேடி: தி டெவில்’ பட விழாவில் ஜாலியாக பேசிய அவர் லியோ படத்தில் தனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை எனவும் தன் திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
News July 11, 2025
மும்பை ரயில் குண்டுவெடிப்பு 19-ம் ஆண்டு நினைவு தினம்

மும்பை புறநகர் ரயில்களில் 2006 ஜூலை 11-ம் தேதி மாலை நேரத்தில் தீவிரவாதிகள் 7 தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் 180-க்கும் மேற்பட்ட அப்பாவி பயணிகள் பலியானதுடன், 800 பேர் பலத்த காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டுவெடிப்புகளில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.