News September 5, 2024
ரவுடிகள் மீது நடவடிக்கை: எஸ்.பி. அதிரடி உத்தரவு

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் நிலுவையில் உள்ள வழக்கு விரைந்து முடிக்கவும் ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கைகளை தொடரவும் கஞ்சா கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
Similar News
News September 4, 2025
நெல்லை: இரவு ரோந்து செல்லும் காவலர் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (செப்.3) இரவு முதல் நாளை(செப்.4) காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அலுவலர்கள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
News September 3, 2025
BREAKING நெல்லை: 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதவல்லி, ராதாபுரம் தலைமை ஆசிரியை ரத்தினாள் சுமதி, மகாராஜா நகர் ஜெயேந்திர பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன், வீரள பெருஞ்செல்வி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா புஷ்பராணி, ஆசிரியை பாக்கியலட்சுமி உள்ளிட்ட 9 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
News September 3, 2025
நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தேசிய மேம்பாட்டு நிறுவனம் சார்பில் செப்டம்பர் 7, 10, 13, 14 தேதிகளில் நெல்லை ஸ்ரீபுரத்தில் ரோஹிணி கோல்டு அகாடமியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெறுகிறது. தங்கத்தின் தரம், ஹால்மார்க், உரைகல், கேரட், விலை நிர்ணயம், போலி நகைகள் கண்டறிதல் குறித்து கற்பிக்கப்படும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் பயிற்சியில் மேலும் விவரங்களுக்கு www.rohinigoldacademy.com இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும். *ஷேர்