News September 5, 2024
தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. HRCED ஆணையர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் வந்த பிறகு (2014 – 2024) பூஜை, அர்ச்சனை, தரிசனக் கட்டணமாக வசூலிக்கப்பட்டவை குறித்த ஆவணங்களை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை செப்.19-க்கு ஒத்திவைத்தது.
Similar News
News August 4, 2025
எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி: ராமதாஸ்

லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி தனது வீட்டில் ரகசியமாக மறைந்து வைக்கப்பட்டிருந்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தனது நாற்காலிக்கு பக்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருவியை நேற்று முன்தினம் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார். யார் வைத்தார்கள்? எதற்கு வைத்தார்கள்? என தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரித்து வருதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
News August 4, 2025
20 மாவட்டங்களில் 7 மணி வரை மழை: IMD

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். உங்க ஊருல இப்போ மழை பெய்யுதா?
News July 11, 2025
TTD-ல் 1,000 மாற்று மதத்தினர் வேலை: மத்திய அமைச்சர் புகார்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் மாற்று மதத்தினர் 1,000 பேர் வேலை பார்ப்பதாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து மதம் மற்றும் சனாதனத்தின் மீது நம்பிக்கை இல்லாதோர் எப்படி திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியலாம் என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.