News September 5, 2024
சட்டம் அறிவோம்: BNS சட்டம் 189 என்ன சொல்கிறது?

அரசை வன்முறைச் செயல்களால் அச்சுறுத்துவது, பொதுச் சொத்துகளை சூறையாடுவது, மாநில & மத்திய அரசுப் பணியாளர்களை கடமையை செய்யவிடாமல் தடுப்பது, மற்றவர்களின் உரிமைகளை மறுப்பது, அரசு நிர்வாகத்தை பழிப்பது போன்ற குற்றங்களை 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடி, செய்யும்போது, அந்தக் கூட்டத்தை சட்டவிரோதமான கூட்டம் என்றும் BNS சட்டப் பிரிவு 189இன் படி, குற்றம் எனவும் வரையறுக்கிறது.
Similar News
News August 4, 2025
நடிகை மீரா மிதுனை கைது செய்ய உத்தரவு

பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்ய சென்னை முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்து 3 ஆண்டுகளாக மீரா மிதுன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன் அங்குள்ள அரசு காப்பகத்தில் இருப்பதாக போலீஸ் கூறியுள்ளது. அவரை கைது செய்து ஆகஸ்ட் 11-ல் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News August 4, 2025
எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி: ராமதாஸ்

லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி தனது வீட்டில் ரகசியமாக மறைந்து வைக்கப்பட்டிருந்ததாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தனது நாற்காலிக்கு பக்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கருவியை நேற்று முன்தினம் கண்டுபிடித்ததாகவும் கூறியுள்ளார். யார் வைத்தார்கள்? எதற்கு வைத்தார்கள்? என தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரித்து வருதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
News August 4, 2025
20 மாவட்டங்களில் 7 மணி வரை மழை: IMD

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல், தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாம். உங்க ஊருல இப்போ மழை பெய்யுதா?