News September 5, 2024

TVK உடன் தேமுதிக கூட்டணியா?

image

விஜய் மாநாடு நடத்தி, அவரது கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். கார் ரேஸ் நடத்த ஒரே இரவில் அனுமதி பெற முடியும் போது, விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் அரசுக்கு என்ன பிரச்னை? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக உடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா? உங்க கருத்த கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News August 4, 2025

BREAKING: தவெக மாநாடு தேதி மாற்றம்

image

மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற இருந்த தவெக மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் நிலையில், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் எழுந்தது. அதனால், போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. இன்று மதுரை எஸ்.பி. அலுவலகம் சென்ற புஸ்ஸி ஆனந்த், மாநாடு தேதியில் மாற்றம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 18 – 22-க்குள் ஏதேனும் ஒரு தேதியில் மாநாடு நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

News August 4, 2025

ஷாருக்கானுக்கு எதன் அடிப்படையில் விருது? ஊர்வசி

image

மலையாளத்தில் ஊர்வசிக்கும், விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகர், நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதுபற்றி பேசிய ஊர்வசி, ஷாருக்கானுக்கு எதன் அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது, அதேசமயம் தங்களுக்கு ஏன் சிறந்த நடிகர், நடிகை பிரிவில் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். தாங்களும் பாடுபட்டுதான் நடிப்பதாக கூறிய அவர், அரசு தரும் விருது ஓய்வூதியம் அல்ல என்றும் சாடியுள்ளார்.

News August 4, 2025

நடிகர் மதன் பாப் மரணம்.. இறந்த பிறகும் சோகம்

image

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய <<17291927>>மதன் பாப்(71)<<>> மறைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்திருந்தபோதும், அவர்கள் யாரும் மதன் பாப்பின் இறுதி அஞ்சலியில் பங்கேற்கவில்லை. திரை பிரபலங்களில் சிலர் மட்டுமே அஞ்சலி செலுத்தினர். இதில் கூட சின்ன நடிகர், பெரிய நடிகர் என பாரபட்சமா என ரசிகர்கள் சாடி வருகின்றனர். இதுபற்றி என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!