News September 5, 2024
கடும் சரிவில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம்

மத்திய அரசின் உயர்கல்வி தரவரிசை பட்டியலில், நாட்டின் 100 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் ஜிப்மரைத் தவிர்த்து இதர புதுச்சேரி அரசு கல்வி நிறுவனங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இதில் புதுச்சேரி காலாபெட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் கடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 13வது இடத்தில் இருந்த மத்திய பல்கலைக்கழகம், தற்போது 100வது இடத்துக்கு வெளியே சென்றுள்ளது.
Similar News
News September 15, 2025
புதுவை: கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க உத்தரவு

மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் குறைதீர் கூட்டத்தில் பேசுகையில் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பதை கண்காணிக்க நேரடியாக வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் குப்பைகள் கிடப்பதை ஒழுங்குபடுத்த சிறப்பு தூய்மை பணி திட்டம் உருவாக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்த ஆட்டோவில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார்.
News September 15, 2025
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தேர்தல் வரையறை மற்றும் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News September 15, 2025
புதுச்சேரி பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சட்டசபையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி மற்றும் காரைக்காலச் சார்ந்த 120 பத்திரிக்கையாளர்களுக்கு புதுச்சேரி அரசின் அங்கீகார அடையாள அட்டையை வழங்கி கௌரவித்தார் நிகழ்ச்சியில் செய்திதுறை இயக்குனர் முனுசாமி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.