News September 5, 2024
வரி செலுத்துவதிலும் ‘King’

FY2023-24இல் கோலி ₹66 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார். கிரிக்கெட் பிரபலங்களில் அதிக IT கட்டியவர்களின் பட்டியலை Fortune India வெளியிட்டுள்ளது. இதில் சச்சின், தோனி ஆகியோரின் கூட்டு மதிப்புக்கு இணையாக கோலி வரி செலுத்தியுள்ளார். அதாவது, தோனி ₹38 கோடியும், சச்சின் ₹28 கோடியும் IT கட்டியுள்ளனர். கங்குலி ₹23 கோடி, ஹர்திக் பாண்டியா ₹12 கோடி, ரிஷப் பண்ட் ₹10 கோடி IT கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 4, 2025
பள்ளி தண்ணீர் தொட்டியில் நஞ்சை கலந்த பிஞ்சு..!

கர்நாடகாவில் தொடக்க பள்ளியின் தண்ணீர் தொட்டியில் 5-ம் வகுப்பு மாணவன் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேங்க் லீடராக தன்னை நினைத்துக் கொண்ட அந்த பையனின் பேச்சை, சக மாணவர்கள் கேட்கவில்லையாம். இதனால், வீட்டில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து வந்து, இந்த கிரிமினல் வேலையை அவன் செய்திருக்கிறான். போலீஸ் விசாரித்தபோது குட்டி கேங்க் லீடர் வசமாக சிக்கியுள்ளான். இதெல்லாம் தேவை தானா?
News August 4, 2025
பெட்ரோல், டீசல் விலை உயரலாம்

அமெரிக்காவின் தடையை ஏற்று, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவுக்கு ஆண்டுக்கு ₹80,000 கோடி முதல் ₹97,000 கோடி வரை கூடுதல் செலவாகலாம். பிற நாடுகளிடம் எண்ணெய் வாங்கும்போது ஒரு பேரலுக்கு குறைந்தது ₹438 கூடுதலாக செலவாகும். இது மேலும் உயரலாம். இதனால் உள்நாட்டிலும் விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்து பொருள்கள், சேவைகள் விலை உயரும். இந்தியா என்ன செய்ய வேண்டும்?
News August 4, 2025
நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை..!

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் நாளை(ஆகஸ்ட் 5) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஏற்கனவே, பனிமய மாதா ஆலய திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆகஸ்ட் 7-ம் தேதி சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். SHARE IT.