News September 5, 2024

சுரண்டையில் மறுசுழற்சியாகும் கழிவுகள்

image

சுரண்டை நகராட்சி வள மீட்பு பூங்காவில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை தொழிற்சாலைக்கு அனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. இதில் ஆணையாளர் ராம் திலகம் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் அறிவுறுத்தலுடன் சுரண்டை நகராட்சி பொருட்கள் மீட்பு அறையில் இருந்து 6.7 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் 1.8 டன் பேப்பர் கழிவுகள் மறுசுழற்சிக்காக தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News

News December 13, 2025

தென்காசி: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

image

தென்காசி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து நாளை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்காலம். சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுவர். நாளை விண்ணப்பிக்க கடைசி தேதி என்பதால் எல்லோரும் தெரிந்து கொள்ள உடனே SHARE பண்ணுங்க

News December 13, 2025

தென்காசி: வக்கீல் கொலையில் தேடப்பட்ட குற்றவாளி தற்கொலை

image

தென்காசியில் கடந்த 3ஆம் தேதி முத்துக்குமாரசாமி (46) என்ற வழக்கறிஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிவசுப்பிரமணியனை (48) தேடி தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 4ம் தேதி நாமக்கல் ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். இதில் தற்கொலை செய்து கொண்டவர் சிவசுப்பிரமணியன் என தெரியவந்தது. அவரது உறவினா்கள் நேரில் உறுதிப்படுத்திய பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

News December 13, 2025

தென்காசி: மாணவிகள் கவனத்திற்கு.., கவலை வேண்டாம்

image

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் ஏராளமான மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு மாணவிகளுக்கு சிலர் இடையூறு செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிவகிரி போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாணவிகள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவிகளுக்கு எவரேனும் தொந்தரவு அளித்தால் அவர்களிடமோ, காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!