News September 5, 2024
IPL-க்கு மவுசு குறைந்ததா?

IPL-ன் மதிப்பு 2024-ல் ₹82,700 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் இதன் மதிப்பு ₹92,500 கோடியாக இருந்த நிலையில், 10.6% குறைந்துள்ளதாக D&P அட்வைசரி வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதே வேளையில், மகளிர் பிரீமியர் லீக்கின் மதிப்பு ₹1,250 கோடியில் இருந்து 8%, ₹1,350 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், மிகவும் மதிப்பு வாய்ந்த அணியாக மும்பை முதல் இடத்திலும், சென்னை 2ஆம் இடத்திலும் இருக்கிறது.
Similar News
News August 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கேள்வி ▶குறள் எண்: 418 ▶குறள்: கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. ▶பொருள்: இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.
News August 5, 2025
‘ஆபரேஷன் சிந்தூர்’ லோகோ பாதுகாக்கப்படுமா?

ஆபரேஷன் சிந்தூர் லோகோவை வணிக பயன்பாட்டிற்கு கோரும் எந்த நிறுவனங்களின் விண்ணப்பங்களும் இதுவரை ஏற்கப்படவில்லை என மத்திய வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‘Operation Sindoor’ (அ) ‘Ops Sindoor’ என்ற பெயரில் டிரேட்மார்க் கோரி, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 46 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் கூறியுள்ளது. அதேவேளையில், ஆபரேஷன் சிந்தூர் லோகோவை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சகமும் வலியுறுத்தியுள்ளது.
News August 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 5 – ஆடி 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை.