News September 4, 2024
சினிமா மீது மட்டும் ஏன் பழி போடுறீங்க? – நடிகை குஷ்பு

இந்தியாவில் உள்ள அனைத்துத் துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளதாக நடிகை குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஏன் சினிமாவை மட்டும் சொல்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ள அவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய விசாகா கமிட்டியின் பரிந்துரை பின்பற்றப்பட வேண்டும் என்றார். அத்துடன், இந்த விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News July 11, 2025
ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை(ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன் அமெரிக்க தூதரகம் மூலம் பேசுவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
புஷ்பாவுக்கு வில்லனாகும் ஸ்ரீவள்ளி?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் மொத்தமாக 5 ஹீரோயின்கள் எனக் கூறப்படுகிறது. தீபிகா படுகோன் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், லிஸ்டில் ரஷ்மிகாவின் பெயரும் அடிபடுகிறது. ஆனால், படத்தில் ஹீரோயினாக இல்லாமல், டெரரான வில்லன் ரோலில் ரஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நெகட்டிவ் ரோலில் கலக்குவாரா ஸ்ரீவள்ளி?
News July 11, 2025
திமுக மூத்த தலைவர் மிசா மாரிமுத்து காலமானார்!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா அண்ணதாசன் என்கிற மாரிமுத்து உடல்நலக்குறைவால் காலமானார். திருவாரூர் மாவட்ட இலக்கிய அணித்தலைவராக இருந்த அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தொடக்க காலத்திலிருந்து கட்சிக்காகவும், கொள்கைக்காகவும் உழைத்த உன்னத மனிதர் என புகழாரம் சூட்டியுள்ளார். மாரிமுத்து மறைவுக்கு திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP