News September 4, 2024
சென்னையில் சைக்கிள் ஓட்ட முடியுமா? அன்புமணி

சென்னையில் சைக்கிள் பாதை எங்கே உள்ளது? என முதல்வருக்கு, அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி சென்னையில் அமைக்கப்பட்டிருந்த சைக்கிள் பாதைகளையும் காணவில்லை; வாடகைக்கு விடுவதற்கான ஸ்மார்ட் சைக்கிள்களையும் காணவில்லை. அவை எப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்”? என Xஇல் வினவியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிய வீடியோவை முதல்வர் இன்று பதிவிட்டு இருந்தார்.
Similar News
News July 11, 2025
இறுதிக்கட்டத்தை நெருங்கும் USA உடனான வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார். இந்தியா – அமெரிக்காவுக்கான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவராக இவர் உள்ளார். மேலும் இந்தியா தரப்பில் இதுவரை 26 நாடுகளுடன் 14-க்கும் மேற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
News July 11, 2025
ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை(ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன் அமெரிக்க தூதரகம் மூலம் பேசுவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
புஷ்பாவுக்கு வில்லனாகும் ஸ்ரீவள்ளி?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் மொத்தமாக 5 ஹீரோயின்கள் எனக் கூறப்படுகிறது. தீபிகா படுகோன் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், லிஸ்டில் ரஷ்மிகாவின் பெயரும் அடிபடுகிறது. ஆனால், படத்தில் ஹீரோயினாக இல்லாமல், டெரரான வில்லன் ரோலில் ரஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நெகட்டிவ் ரோலில் கலக்குவாரா ஸ்ரீவள்ளி?