News September 4, 2024
அமலானது ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்!

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஒப்புதல் அளித்துள்ளார். பழைய ஓய்வூதியம், தற்போது நடைமுறையில் இருக்கும் புதிய ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு மாற்றாக, இந்த ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 78 லட்சம் மத்திய அரசின் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். நாட்டின் எந்த மூலையிலும், எந்தவொரு வங்கியிலும் பென்ஷனை பெற்றுக் கொள்ளலாம்.
Similar News
News August 21, 2025
தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு: NIA அதிரடி

PMK நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக 9 இடங்களில் நேற்று NIA சோதனை நடத்தியது. இதில், கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்தி வந்த இம்தாதுல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட PFI அமைப்புடன் அவர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான 3 போலீஸ் அதிகாரிகளை தனது ஹோட்டலில் தங்க வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர் மட்டும் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
News August 21, 2025
தவெகவுக்கும் தலைவலியான ஆம்புலன்ஸ்

பரப்புரைக்கு நடுவே நோயாளிகள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் டிரைவர் நோயாளியாக்கப்படுவார் என EPS பேசியது பெரும் சர்ச்சையானது. இதேபோல் தவெக மாநாட்டிலும் ஆம்புலன்ஸால் சர்ச்சை வெடித்துள்ளது. மாநாட்டுத் திடலுக்குள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் 4 தவெக தொண்டர்கள் திடலுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். தடுப்புக் கம்பிகள் மேல் குதித்தும் தொண்டர்கள் உள்ளே வருகின்றனர்.
News August 21, 2025
டெல்லி CM-க்கு Z பிரிவு பாதுகாப்பு

தலைநகரில் தாக்குதலுக்கு உள்ளான டெல்லி CM ரேகா குப்தாவுக்கு மத்திய அரசு Z பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பிரிவில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த 4-6 வீரர்கள் உள்பட 22 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதோடு, ஒரு புல்லட் புரூஃப் வாகனம் உள்பட 5 வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாதம் ₹16 லட்சம் வரை செலவாவதாக கூறப்படுகிறது.