News September 4, 2024
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பண மோசடி

துாத்துக்குடி மாவட்ட ஆட்சியரக 3வது தளத்தில் கனிம வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த பிரிவில், கணக்கு அதிகாரியாக மறவன்மடத்தை சேர்ந்த தமிழ்செல்வி (43) என்பவர் ஒப்பந்த ஊழியராக 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 2 மாதமாக பணிக்கு வரவில்லை. இதையடுத்து, அதிகாரிகள் விசாரித்தபோது ரூ.60 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. தற்போது, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
தூத்துக்குடி: 558 வழக்குகளுக்கு தீர்வு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் நேற்று (செப்.13) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோர் முன்னிலையில்விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்கு என 558 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீர்வு காணபட்டது.
News September 14, 2025
தூத்துக்குடி: உங்க பெயர்ல இத்தனை SIM -ஆ??

தூத்துக்குடி மக்களே உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை SIMகள் இருக்குன்னு சந்தேகம் உள்ளதா?? அதை எப்படி பார்க்கிறன்னு தெரியலையா? மத்திய அரசின் சஞ்சார்சாதி மூலம் உங்க ஆதார் எண் மூலமா எத்தனை SIMகள் உள்ளதுன்னு. இங்கு <
News September 14, 2025
தூத்துக்குடியில் சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை

தூத்துக்குடி தாளமுத்து நகர் அன்னை தெரேசா மீனவர் காலனியை சேர்ந்தவர் எட்வர்ட் மகன் வினிஸ்டன் (30). இவர் தாளமுத்து நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். தருவைகுளம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்க்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.