News September 4, 2024

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணிர்

image

கொல்லிமலை பகுதியில் அமைந்துள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் வரும் காரணத்தால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் அனுப்பி வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் தகுந்த பாதுகாப்புடன் குளிக்க வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு செல்வோரை வனத்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். மேலும் தொடர் மழை காரணமாக அருவியில் நீர் வரத்து மிகவும் அதிகரித்து வருகிறது.

Similar News

News November 14, 2025

நாமக்கல்: 11,364 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளனர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நாளை நவ.15ஆம் தேதி முதல் தாள் நடைபெற உள்ளது. இதில் 1,708 நபர்களும் 16ஆம் தேதி இரண்டாவது தாள் நடைபெற உள்ளது. இதில் 9,656 நபர்கள் என மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் தேர்வில் 11,364 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-14ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.85 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

News November 14, 2025

நாமக்கல் நான்கு சக்கர வாகன காவலர் விபரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நவம்பர்-14ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கல் – தங்கராஜ் (9498170895), வேலூர்- சுகுமாரன் (8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி (9498169110), திருச்செங்கோடு – பெருமாள் (9498169222), திம்மநாயக்கன்பட்டி – ரவி (9498168665), குமாரபாளையம் – ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர்.

error: Content is protected !!