News September 4, 2024

நடிகர் தாடி பாலாஜி இன்று மாநகராட்சி பள்ளிக்கு வருகிறார்

image

நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை அரசு பெண்கள் பள்ளியில் படித்து இந்த வருடம் நீட் தேர்வு எழுதி 6 மாணவிகள் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவிகளை பாராட்டி பரிசு வழங்குவதற்காக நடிகர் தாடி பாலாஜி நாளை (செப்.4) கல்லணை பள்ளிக்கு வருகிறார். காலை 11 மணியளவில் கல்லணை பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Similar News

News September 6, 2025

நெல்லை: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஓடக்கரை துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.6) நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்.

News September 6, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!