News September 4, 2024

அமைச்சர் எ.வ. வேலுக்கு வரவேற்பு

image

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தார். அவரை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னாள் எம்எல்ஏ, ஆஸ்டின் உட்பட திமுகவினர் வரவேற்றனர்.

Similar News

News November 10, 2025

குமரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் விண்ணப்பம் விபரம்

image

குமரி சட்டமன்ற தொகுதியில் 2,81,793, நாகர்கோவில் தொகுதியில் 2,07,186, குளச்சல் தொகுதியில் 2.49,733, பத்மநாபபுரம் தொகுதியில் 2,27,417, விளவங்கோடு தொகுதியில் 2,343,43, கிள்ளியூர் தொகுதியில் 2,43,346 என மொத்தம் 14,43,818 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 90.64 சதவீதம் ஆகும் என்று மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News November 10, 2025

குமரி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

குமரி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க.

News November 10, 2025

குமரியில் பெண் அதிகாரியிடம் நகை பறிப்பு

image

குமரியில் இருந்து மங்களூருக்கு பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை புறப்பட இருந்தது. அப்போது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வன அதிகாரி திவ்யா அதில் ஏறச் சென்ற போது ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு ஓடிவிட்டார். ரயில்வே பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து அந்த நபரை தேடி வந்தனர் அப்போது அங்கு பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை கைது செய்தனர்.

error: Content is protected !!