News September 4, 2024
தி.மலை ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இங்கி வரும் கால்நடை மண்டல இணை இயக்குனர் அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் 20.9.2024 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள முன் தொகையாக ரூ.2400 செலுத்த வேண்டும். ஏலத்தில் அதிக விலை கேட்பவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். வாகனங்களை வேலை நாட்களில் நேரில் பார்வையிடலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
தி.மலையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.13) கள ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று செயல்பட்டுவரும் பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
News August 13, 2025
கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு மானியம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 132 விவசாயிகளிடமிருந்து 10,712.387 டன் கரும்பு பெறப்பட உள்ளது. அகல பார் அமைத்து பருசீவல் நாற்று, ஒரு பருக்கரணை நடவு உள்ளிட்ட முறைகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய திட்டங்கள் மூலம் ஹெக்டருக்கு ரூ.3,000 – ரூ.18,625 வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
தி.மலை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <