News September 3, 2024
64 வணிக நிறுவனங்களுக்கு சிக்கல்!

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முருகப் பிரசன்னா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆக., மாதம் 109 கடை மற்றும் நிறுவனங்களில் எடை அளவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 64 நிறுவனங்கள் விதி மீறியது கண்டறியப்பட்டது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றுள்ளார்.
Similar News
News September 6, 2025
நெல்லை: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

நெல்லை மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 6, 2025
மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஓடக்கரை துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், மணிமுத்தாறு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செப்.6) நடைபெற உள்ளதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிவித்துள்ளார்.
News September 6, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 5) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.