News September 3, 2024

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்

image

திருச்சி உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குழந்தைகள் உதவி மையம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மருத்துவர் சாம்சன் மீது போலீசார் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகன்தான் மருத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News August 16, 2025

திருச்சி: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

image

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரெண்டாம் தேர்ச்சி பெற வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News August 16, 2025

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரிப்பு

image

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரித்துள்ளதாக டி.ஆர்.எம் பாலக்ராம் நேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ரயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல்-1 முதல், ஜூலை-31 வரை பயணிகள் பயணம் செய்த வகையில் ரூ.187.46 கோடியும், சரக்கு அனுப்பிய வகையில் ரூ.318.94 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட அதிகம்” என தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

திருச்சி: வீட்டு வசதி வாரியம் சலுகை அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகளில் ஒதுக்கீடு பெற்று 2015 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப்பெற ஒதுக்கீடுதாரர்கள் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!