News September 3, 2024
DRDO அமைப்பில் வேலை: உடனே விண்ணப்பிங்க

DRDO அமைப்பில் தொழிற் பழகுநர் (APPRENTICE) அடிப்படையில் 54 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலையின் பதவிக் காலம் ஓராண்டு ஆகும். கல்வி தகுதி இன்ஜினியரிங் ஆகும். வேலைக்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி கடைசி நாள் ஆகும். வேலை பற்றிய கூடுதல் விவரங்களை DRDO இணையதளத்தில் காணலாம். இந்த தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். இதை பிறருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News August 21, 2025
இதை செய்தால் வீட்டிற்குள் கொசு நுழையாது

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொசுக்களும் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றின் மூலம் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதால் அவற்றை விரட்ட மக்கள் பல முயற்சிகளை கையாளுகின்றனர். கொசுவை விரட்ட, 5-10 பூண்டை நீரில் ஊறவைத்து அந்த நீரை வீடு முழுவதும் தெளித்தால், அந்த வாடைக்கு வீட்டிற்குள் கொசு வாராது எனக் கூறப்படுகிறது. வீட்டிற்குள் சூடம் கொளுத்துவதன் மூலமும் கொசு வரவிடாமல் தடுக்கலாம்.
News August 21, 2025
தமிழ் இயக்குநர்களால் முடியாததை சாதித்த லோகேஷ்

அண்மையில் வெளியான ‘கூலி’ படம் தற்போது 400 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது. இதற்கு முன் லோகேஷ் இயக்கிய விக்ரம், லியோ படங்களும் 400 கோடிகளை வசூலித்துள்ளன. இதனால் 400 கோடிகளை வசூலித்த ஹாட்ரிக் பட இயக்குநர் என்ற பெருமையை லோகேஷ் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் எந்த இயக்குநரும் இச்சாதனை புரிந்ததில்லை. தெலுங்கில் ராஜமெளலி, ஹிந்தியில் ராஜ்குமார் ஹிராணி ஆகியோர் மட்டுமே இச்சாதனையை செய்துள்ளனர்.
News August 21, 2025
இச்சாதனையை தகர்த்தால் Life Time Settlement..!

கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது, பின் நாட்களில் சர்வசாதாரணமாக தகர்த்தப்பட்டிருக்கும். உதாரணமாக ODI-ல் சயீத் அன்வர் 194 அடித்தது. ODI-ல் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக இது இருந்த நிலையில், சுமார் 14 ஆண்டுகள் பின் சச்சின் 200 ரன்கள் அடித்து இச்சாதனையை தகர்த்தார். ஆனால் ஒரு சில சாதனைகள் இன்னும் பலரால் எட்டமுடியாமல் உள்ளன. அவை மேலே போட்டோவில் கொடுத்துள்ளோம் SWIPE செய்து பார்க்கவும்.