News September 3, 2024
இளைஞர் கழுத்தில் குத்தி கொடூர கொலை

திருமங்கலம் தாலுகா கூடக்கோவிலை சேர்ந்தவர் கருப்பசாமி 35, இவர் கூடக்கோவிலில் சலூன் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர் கல்லணைக்கு வேலை தொடர்பாக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை கருப்பசாமி கல்லணை கண்மாய் கரையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 26, 2025
மதுரை: விநாயகர் சதுர்த்திக்கு இங்க விசிட் பண்ணுங்க..!

மதுரை கீழமாசி வீதியில் அமைந்துள்ள மொட்டை விநாயகர் கோயிலில், தலையில்லாமல் மொட்டை கணபதியாக காட்சி தரும் இவரை தரிசிக்கலாம். ஈசன் அறியாமல் பார்வதி தேவியின் காவலராக இருந்த சிறுவனின் தலையைக் கொய்தார். அந்தச் சிறுவனே மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். பக்தர்களிடையே இக்கோயிலில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கும் வழக்கமும் உள்ளது. நீங்களும் நாளை விநாயகர் சதுர்த்திக்கு ஒரு VISIT பண்ணி பாருங்க.
News August 26, 2025
மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.
News August 26, 2025
மதுரை: மகளிர் உரிமைத் தொகை புகாரளிக்கலாம்

மதுரை மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால் <