News September 3, 2024
உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

கள்ளக்குறிச்சியில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கப்படவுள்ளது. தகுதி உடையவர்கள் www.sdat.tn.gov.in மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
Similar News
News September 5, 2025
கள்ளக்குறிச்சி: கல்லூரியில் கனவு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தச்சூர் தனியார் மகளிர் கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்வியின் மூலம் வாழ்க்கையில் உயர்வது தொடர்பாக பேசினார். மேலும் திரளான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
News September 5, 2025
கள்ளக்குறிச்சி இரவு ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (செப்டம்பர் 4-ம் தேதி ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
News September 4, 2025
கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய 6 முக்கிய சிவன் கோயில்கள்

▶அசகளத்தூர் லோகபாலீஸ்வரர் கோயில்,
▶செல்லம்பட்டு விஸ்வநாதசுவாமி கோயில்,
▶பெருமங்கலம் சுந்தரேஸ்வரர் கோயில்,
▶மகரூர் கைலாசநாதர் கோயில்.
▶தண்டலை சுயம்புநாதீஸ்வரர் கோயில்.
▶ரிஷிவந்தியம் அர்த்த நாரீசுவரர் கோயில்.
இது தவிர வேறு கோயில்கள் இருந்தால் கமெண்ட் செய்து விட்டு மறக்காம ஷேர் பண்ணுங்க