News September 3, 2024
அரியலூர்- நெல்லுக்கான குறைந்த பட்ச விலை

அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படும் நெல்லுக்கான விலை பற்றி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதில் ஏ கிரேடு நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,320/- மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.130/- ஆகக்கூடுதல் தொகை ரூ.2,450/- ஆகும். குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் 1க்கு ரூ.2,300/- மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.105/- ஆகக்கூடுதல் தொகை ரூ.2,405 என தெரிவித்தார்.
Similar News
News August 18, 2025
அரியலூர் மக்களே உஷாரா இருங்க.. எச்சரிக்கை!

அரியலூரில் ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!
News August 17, 2025
அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும், அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசரகால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
அரியலூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.