News September 3, 2024
லாட்டரி சீட்டு வாங்கி வந்தவர் கைது

தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொட்டல்புதூரை சேர்ந்த மைதீன் என்பவர் லாட்டரி சீட்டு விற்பனைக்காக கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வாங்கி வந்த போது புளியரை வாகன சோதனையில் அவரிடமிருந்து ரூ.79000 மதிப்பிலான 1700 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து புளியரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 5, 2025
தென்காசி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்…APPLY!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தென்காசி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். SHARE பண்ணுங்க.
News October 5, 2025
தென்காசியில் ஒருவர் தற்கொலை

தென்காசியை அடுத்த ஆய்க்குடி செல்லும் சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில், உடையாம்புளியைச் சேர்ந்த 48 வயது பாக்கியமுத்து, தென்னை மருந்தின் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார். மனைவி பிரிந்து சென்றதாலும், மதுப்பழக்கத்தாலும் ஏற்பட்ட விரக்தியே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.
News October 5, 2025
தென்காசியில் துப்பாக்கியை ஒப்படைக்க கெடு!

தென்காசியில் அனுமதி இல்லாத துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தாமாக முன் வந்து துப்பாக்கியை ஒப்படைக்க நவ.30 தேதி வரை கால கெடு. மேலும் tenkasidfo@gmail.com என்ற இணையதள முகவரியிலும், மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்-04633233550, சிவகிரி- 04636298523, புளியங்குடி-04636235853, கடையநல்லூர் -04633210700, குற்றாலம்-04633298190, தென்காசி -0463323366 தொடர்பு கொள்ளலாம்.