News September 2, 2024

கும்பகோணம் பகவத் விநாயகருக்கு பண அலங்கார வழிபாடு

image

கும்பகோணம் நகரின் மையப்பகுதியில் மடத்து தெருவில் அருள்பாலித்து வரும் பகவத் விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயிலின் இணை கோயிலாக திகழ்ந்து வருகிறது. பிரசித்தி பெற்ற கோயில் காசியை விட அதிக புண்ணியம் கொண்டதாக திகழ்கிறது. இங்கு பகவத் விநாயகர் நவக்கிரகங்கள் குடி கொண்டுள்ளனர். இதனையடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு ரூபாய் நோட்டுக்களை கொண்டு கரன்சி அலங்காரம் செய்து வழிபட்டனர்.

Similar News

News August 21, 2025

தஞ்சை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<> eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News August 21, 2025

தஞ்சை: மனைவியை கொலை செய்த கணவன் கைது

image

கும்பகோணம் அருகே பவுண்டரீகபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவருடைய மனைவி ஜெய சித்ரா. கடந்த 2016-ம் ஆண்டு குடும்ப தகராறு ஒன்றில், ஜெயசித்தராவை மோகன்ராஜ் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிந்த போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து, தலைமறைவாக இருந்த மோகன்ராஜை திருநீலக்குடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

News August 21, 2025

தஞ்சாவூர் இரவு ரோந்து செலும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.18) இரவு காவல்துறையின் தீவிர ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தங்களது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொலைபேசி மூலமாக அல்லது நேரடியாக 100 என்ற எண்களை டயல் செய்து தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!