News September 1, 2024
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலோசனை

நாளை (செப். 2) மாலை 3.30 மணி அளவில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இதில் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
துணை ஜனாதிபதிக்கு நயினார் வாழ்த்து

பாஜக மாநில தலைவர் நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக விரைவில் பதவியேற்று மாநிலங்களவையை வழிநடத்த இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தை வழிநடத்தும் முக்கியப் பொறுப்பைத் தமிழர் அலங்கரிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
News September 9, 2025
நெல்லையில் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் சிறுவர் சிறுமிகள்

நெல்லை மாநகர பகுதியில் சமீபகாலமாக சிறுவர், சிறுமிகள் ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அவலம் அதிகரித்துள்ளது. எனவே இந்த சிறுவர்கள் குறித்தான விவரங்களை சேகரித்து இவர்களை கல்வி பயில மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதனை விரைந்து தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
News September 9, 2025
காணொளியில் மாவட்ட செயலாளர் கலந்துரையாடல்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று (செப்.9) மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் இரா. ஆவுடையப்பன் திருநெல்வேலி திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.