News September 1, 2024
காரைக்குடி மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டி

சிவகங்கை மாவட்டம் பிஎன்ஐ செட்டிநாடு சார்பாக இன்று மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டிகள் காரைக்குடி பிருந்தாவன் உள் விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. மொத்தம் தமிழக அளவில் 60 அணிகள் பங்கேற்றுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பிஎன்ஐ செட்டிநாடு சாப்டர் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.
Similar News
News August 17, 2025
சிவகங்கை மக்களே.. டிக்கெட் ஓபன்.. ரெடியா இருங்க.!

சிவகங்கை மக்களே.. தீபாவளி பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.17) துவங்குகிறது. அதன்படி, அக்.16ஆம் தேதிக்கான முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம். அக்.17ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.18ஆம் தேதிக்கான முன்பதிவை நாளை மறு நாளும் செய்து கொள்ளலாம். அதேபோல, அக்.19ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.20ஆம் தேதியும், தீபாவளி நாளான அக்.20ஆம் தேதிக்கான முன்பதிவை ஆக.21ஆம் தேதியும் செய்து கொள்ளலாம்.
News August 16, 2025
சிவகங்கை: இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (16.08.25) இன்று இரவு 10 மணி முதல் மறு நாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்து தங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம் என சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
News August 16, 2025
சிவகங்கை: 1 இலட்சம் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக்கூடிய மக்கும் பொருட்கள் பயன்படுத்தும் உரிமம் பெற்ற உணவகங்களுக்கு 1 இலட்சமும், பதிவு சான்றிதழ் பெற்ற உணவு வணிகருக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆக.31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04575-243725.