News September 1, 2024
சட்டம் அறிவோம்: BNS பிரிவு 274 என்ன சொல்கிறது?

விற்பனை செய்யப்படும் உணவு அல்லது பானங்களில் கலப்படம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதை முதல் முறையாக புரியும் நபருக்கு 6 மாதங்கள் சிறை அல்லது ₹10,000 அபராதம் விதிக்கப்படலாம். 2ஆவது முறை சட்டத்தை மீறினால், 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை & உரிமம் ரத்து செய்யப்படலாம். மனித நுகர்வுக்குத் தகுதியற்ற & கலப்பட உணவை விற்றால், விற்பனையாளர் தண்டனைச் சட்டத்தின் 320 பிரிவின் கீழ் தண்டிக்கப்படுவர்.
Similar News
News July 9, 2025
அதிகாலையில் எழுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரமே படுக்கைக்குச் செல்வதும்தான் சிறந்தது. அதிகாலை எழுவதால் மூளை நரம்பு இயக்கங்கள் சீராகச் செயல்படும். யோகா, உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கும். இதனால் நுரையீரல் வலுவடையும். ஆஸ்துமா, சைனஸ், உடல் பருமன், சர்க்கரைநோய் வருவது குறையும். பின்பு இரவு சரியான நேரத்துக்குத் தூக்கம் வருவதால், மன அழுத்தம், ரத்த அழுத்தம் வராது என்கின்றனர் மருத்துவர்கள்.
News July 9, 2025
ஜூலை 9… வரலாற்றில் இன்று!

*1866 – பனகல் அரசர், சென்னை மாகாணத்தின் 2-ஆவது முதலமைச்சரானார். *1877 – முதலாவது விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாயின. *1930 – திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் பிறந்த தினம் * 2006 – சைபீரியாவில் இர்கூத்ஸ்க் விமான நிலையத்தில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 125 பேர் உயிரிழந்தனர். *2011 – சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் தனி நாடானது.
News July 9, 2025
’அதிகாரிகள் மீது நடவடிக்கை’: அமைச்சர் சேகர் பாபு உறுதி

வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவில் புனித நீர் ஊற்ற செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அமைச்சர் சேகர்பாபு தனது இல்லத்துக்கு வந்து தன்னை சந்தித்து வருத்தம் தெரிவித்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.