News September 1, 2024

நாமக்கல்: பெண் போலீஸ் புகாரில் கணவர் கைது

image

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் முதல்-நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் சித்தேஸ்வரி. இவரது கணவர் சரவணகுமார். இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சரவணகுமார் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடிப்பதாக சித்தேஸ்வரி, சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இன்று சேந்தமங்கலம் போலீசார் சரவணகுமாரை கைது செய்தனர்.

Similar News

News November 14, 2025

நாமக்கல்லில் 58-வது தேசிய நூலக வார விழா!

image

நாமக்கல் மாவட்ட மைய நூலகம் மற்றும் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் 58-வது தேசிய நூலக வார விழா, வரும் (16-11-2025) ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், கோட்டை நகரவை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி தலைமை வகிக்க உள்ளார். நல்லாசிரியர் விருது பெற்ற முதுகலை தமிழாசிரியர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

News November 14, 2025

நாமக்கல்: 11,364 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளனர்!

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நாளை நவ.15ஆம் தேதி முதல் தாள் நடைபெற உள்ளது. இதில் 1,708 நபர்களும் 16ஆம் தேதி இரண்டாவது தாள் நடைபெற உள்ளது. இதில் 9,656 நபர்கள் என மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் தேர்வில் 11,364 தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர்-14ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.5.90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.85 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!