News September 1, 2024
மன்னார்குடி அருகே பெண் மரணம்

மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (36). இவருக்கும், தஞ்சை பகுதியை சேர்ந்த பவானி (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் பவானி தனது அறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில் பவானியின் தாயார் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரவாக்கோட்டை போலீசில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
திருவாரூரில் கல்விக் கடன் முகாம்-ஆட்சியர் தகவல்

திருவாரூர் மாவட்டத்தில், வரும் செப்.17-ம் தேதி மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாமில் அனைத்து வங்கிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 12-ம் வகுப்பு முடித்து, உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News September 12, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (செப்.12) இரவு 10 மணி முதல் இன்று(செப்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 12, 2025
திருவாரூர்: உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம்

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண்மை/தோட்டக்கலை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு/பட்டய படிப்பு படித்த மாணவர்களுக்கு முதலமைச்சரின் உழவர் நல மையம் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு https//www.tngrisnet.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.