News August 31, 2024

Rupay கிரெடிட் கார்டுகளுக்கு புதிய விதி நாளை அமல்

image

இந்தியாவில் UPI பரிவர்த்தனையை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், Rupay Credit Card பயன்படுத்தி UPI பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், Rupay கிரெடிட் கார்டுகளுக்கு Visa, Master போன்ற மற்ற கார்டுகளை போல Reward Points, benefits வழங்க அனைத்து வங்கிகளுக்கும் NPCI உத்தரவிட்டுள்ளது. இந்த விதி நாளை முதல் அமலுக்கு வருகிறது.

Similar News

News August 21, 2025

PF கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்வு

image

மத்திய அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், EPF-லிருந்து வழங்கப்படும் கருணைத் தொகை ₹15 லட்சமாக உயர்த்தப்படும் (ஏப்ரல் 1, 2025 முதல்) என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு இது ₹8.8 லட்சமாக இருந்தது. இத்தொகை இறந்தவரின் சட்டரீதியான குடும்பத்தினர் / வாரிசுகளிடம் வழங்கப்படும். மேலும், இத்தொகை ஏப்ரல் 1, 2026 முதல் ஆண்டுக்கு 5% என்ற அளவில் உயர்த்தப்படும் எனவும் EPFO அறிவித்துள்ளது.

News August 21, 2025

பெற்றோருக்கு எழுதிய லெட்டர்; அதிகாரியின் Nostalgic Moment

image

பதிவுத் தபால் சேவை செப்.1 முதல் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் தனது தபால் அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் Ex.வான்படை அதிகாரி ஒருவர். 1972-ல் புனேவின் தேசிய டிபென்ஸ் அகாடமியில் இருந்து, தன்னுடைய பெற்றோருக்கு கடிதம் அனுப்ப ’கேடட்ஸ் மெஸ்’ எனும் தபால் பெட்டியை பயன்படுத்தியிருக்கிறார். இதனை நினைவுகூர்ந்த அவர் அப்பெட்டி கடிதங்களின் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கிறது எனக் கூறி நெகிழ்ந்துள்ளார்.

News August 21, 2025

தீபாவளிக்கு 20% தள்ளுபடி.. அமைச்சர் அறிவிப்பு

image

தீபாவளி, சத் பண்டிகைகளையொட்டி நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும், பயணக் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, அக். 13 முதல் 26-க்குள் புறப்பட்டு, நவ. 17 முதல் டிச.1-க்குள் திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!