News August 31, 2024
வேளாண்மை பொறியியல் துறை சார்பில் முகாம்

வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் சந்திரசேகரன் இன்று தொடங்கி வைத்தனர். உடன் பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், தஞ்சை மாநகரச் செயலாளர் மேயர், துணை மேயர், மாவட்ட ஆட்சியர் உள்ளனர்.
Similar News
News August 21, 2025
தஞ்சை: விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி கட்டாயம்

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஆக.20) நடைபெற்றது. இதில், விநாயகா் சதுா்த்தியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய கோட்டாட்சியரின் அனுமதி கட்டாயம் பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
News August 21, 2025
தஞ்சை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி ?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்,<
News August 21, 2025
தஞ்சை: மனைவியை கொலை செய்த கணவன் கைது

கும்பகோணம் அருகே பவுண்டரீகபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (45). இவருடைய மனைவி ஜெய சித்ரா. கடந்த 2016-ம் ஆண்டு குடும்ப தகராறு ஒன்றில், ஜெயசித்தராவை மோகன்ராஜ் கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிந்த போலீசார், அவரை தேடி வந்தனர். இந்நிலையில் 9 ஆண்டுகள் கழித்து, தலைமறைவாக இருந்த மோகன்ராஜை திருநீலக்குடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.