News August 31, 2024
Did You Know: அடடே… ஆச்சரியமா இருக்கே..!

*எலுமிச்சையில் ஸ்ட்ராபெர்ரியை விட அதிக சர்க்கரை உள்ளது. *8% பேருக்கு கூடுதல் விலா எலும்பு உள்ளது. *85% தாவர உயிரினங்கள் கடலில் காணப்படுகின்றன. *ஈர்ப்பு விசை இல்லாவிட்டால், பறவைகளால் உணவை விழுங்க முடியாது. *ஆங்கிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் எழுத்து ‘E’. *மனித உடலில் மிகச்சிறிய எலும்பு காதில் காணப்படுகின்றன. *பூனைகள் வாழ்நாளில் 66% நேரம் தூங்குகின்றன. தகவல் பிடித்திருந்தால் லைக் போடுங்க.
Similar News
News July 8, 2025
பாரத் பந்த்… பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்குமா?

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாளை (ஜூலை 9) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. அதில், தமிழகத்திலும் ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனால், அத்தியாவசிய பணிகள் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இரவுக்குள் வெளியாகுமா?
News July 8, 2025
2-வது டெஸ்டிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி

2-வது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா கேப்டன் முல்டரின்(367) முச்சதத்தால் 626 ரன்களை குவித்தது. தென்னாப்பிரிக்கா டிக்ளேர் செய்ததால் களமிறங்கிய ஜிம்பாப்வே 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ ஆன் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 220 ரன்களில் ஆல் அவுட்டாகியது. இதனால் இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.
News July 8, 2025
இசையமைப்பாளர் கீரவாணி தந்தை காலமானார்

AR ரஹ்மானுக்கு பிறகு இந்தியாவில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி. இவரின் தந்தையும், பாடலாசிரியருமான சிவ சக்தி தத்தா(83) வயது மூப்பால் காலமானார். தனது கவித்துவமான வரிகளை கொண்டு பாகுபலி, RRR உள்பட பல்வேறு படங்களுக்கு ஹிட் பாடல்களை அவர் எழுதியுள்ளார். சிவ சக்தி தத்தா மறைவுக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP