News August 31, 2024
மயிலாப்பூர் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு சொந்தமான மயிலாப்பூர் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மயிலாப்பூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த நிலையில், 5ஆவது நாளாக தேவநாதனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News September 17, 2025
சென்னையில் மழை- மின் தடையா கவலை வேண்டாம்!

சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், மின்தடை ஏற்படும்போது, மின்னகம் (9498794987) எண்ணுக்கு கால் செய்து புகார் தெரிவிக்கலாம். அங்கு லைன் கிடைக்கவில்லை என்றால், சென்னை வடக்கு பகுதியில் வசிப்பவர்கள் 9444099255, மத்திய சென்னை பகுதியில் வசிப்பவர்கள் 9445850739, சென்னை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் 9498378194, சென்னை தெற்கு பகுதியில் வசிப்பவர்கள் 9150056672 என்ற வாட்ஸ் அப் எண்களில் புகார் அளிக்கலாம்.
News September 17, 2025
சென்னையில் பெண்களுக்கு தையல் பயிற்சி

சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில், இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பின் நிதி உதவியுடன், தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் சார்பில் தையல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. வரும் அக்.1ஆம் தேதி முதல் தண்டையார்பேட்டையில் பார்வையற்ற பெண்களுக்கு 6 மாத கால இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு 90423 45660, 93445 48654 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News September 17, 2025
சென்னையில் பெரியாரின் கடைசி பேச்சு…

தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெரியாருக்கும், சென்னைக்கும் உணர்வுபூர்வமான ஒரு இணைப்பு உள்ளது. ஆம், தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில், “சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்றார்”. அதுவே அவரின் கடைசிப் பேச்சாக மைந்தது.