News August 31, 2024

TNஇல் அபாய அளவில் போதை பொருள் புழக்கம்: R.N.ரவி

image

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு, அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருவதாக ஆளுநர் R.N.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில், போதை பொருள் புழக்கத்தை குறைக்க வேண்டும் என நினைக்கக் கூடாது என்று வலியுறுத்திய அவர், முற்றிலும் அதனை ஒழித்து வெளியேற்ற வேண்டும் என மாணவர்களிடம் கோரிக்கை வைத்தார். முன்னதாக, சென்னை WCC கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது இதனைப் பேசினார்.

Similar News

News July 8, 2025

பும்ராவை எதிர்கொள்ள தயாராகுங்கள்: ENG ஹெட் கோச்

image

பும்ராவின் சவால் மிகுந்த பந்துவீச்சை எதிர்கொள்ள இங்கி., அணி சிறப்பான திட்டங்களுடன் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த அணியின் ஹெட் கோச் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் 11-ல் இடம்பெறாத பும்ரா, லாட்ஸில் நடைபெறவுள்ள 3-வது டெஸ்ட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆகாஷ் தீப் அபாரத் திறமையை வெளிப்படுத்தியுள்ளதால் இங்கி.,க்கு கடும் போட்டி எழுந்துள்ளது.

News July 8, 2025

கொடூரத்தின் உச்சம்.. ரயிலில் பெண் கூட்டு பலாத்காரம்

image

நாள்தோறும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்கள் குலைநடுங்க வைக்கின்றன. ஹரியானாவில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் பெண்ணை கும்பலாக பலாத்காரம் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடூரத்தை அரங்கேற்றிய பிறகு, கொடூரர்கள் அந்த பெண்ணை தண்டவாளத்தில் வீசியுள்ளனர். அப்போது, மற்றொரு ரயில் ஏறியதால் அந்த பெண்ணின் கால் துண்டாகியுள்ளது. இதுக்கெல்லாம் எப்போதுதான் தீர்வு கிடைக்கும்?

News July 8, 2025

90% மூளை இல்லாமலும் சாதாரண வாழ்க்கை… எப்படி?

image

பிரான்சில் 44 வயதான ஒருவர் குடும்பம், வேலை என சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு திடீரென ஒரு நாள் தீராத கால் வலி ஏற்பட ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். அவரது ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளையின் 90% பாகத்தை காணவில்லை. இதனை ஹைட்ரோசெபலஸ் (Hydrocephalus) என்பார்கள். அதாவது, மூளைக்குள் சீராக இருக்க வேண்டிய தண்டுவட திரவம் (CSF) அதிகமாகச் சேர்ந்து, மூளை அமைப்புகளை அழுத்துவதால் இப்படியான நிலை ஏற்படுகிறது.

error: Content is protected !!