News August 31, 2024

தனபால் தான் என்னோட சாய்ஸ்: திவாகரன்

image

இபிஎஸ்ஸுக்கு பதில், முன்னாள் சபாநாயகர் தனபாலை CM ஆக்கலாம் என சசிகலாவிடம் கூறியதாக, அவரது சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். தனது இந்தக் கருத்தை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரித்த நிலையில், அதிமுகவில் இருந்த 35 தலித் MLAக்கள் அதனை ஏற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா ஜெயிலுக்கு சென்ற நிலையில், இபிஎஸ்ஸை அவர் TN முதலமைச்சராக்கினார்.

Similar News

News July 8, 2025

அன்புமணியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தனது மகள் காந்திமதியை, ராமதாஸ் மேடையில் அமர வைத்தது குறிப்பிடத்தக்கது.

News July 8, 2025

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜூ!

image

இளம் சென்சேஷன் மமிதா பைஜூ தான் தற்போது பல முன்னணி நடிகர்களின் சாய்ஸ். ஜனநாயகன், சூர்யா 46, Dude என தொடர்ந்து பெரிய படங்களில் நடித்து வரும் அவர் தற்போது அடுத்த பெரிய புராஜெக்டையும் பிடித்து விட்டார். ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் தனுஷின் அடுத்த படத்தில் ஹீரோயினாக மமிதா கமிட்டாகி இருக்கிறார். இவுங்க ஜோடி எப்படி இருக்கும்?

News July 8, 2025

ஆண்களை பாதிக்கும் வெரிக்கோசில்

image

குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை & தரக் குறைவு. இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று வெரிக்கோசில் பிரச்னையாகும். விதைப்பைகளுக்கு செல்லும் ரத்தக் குழாய் வீங்குவதே வெரிக்கோசில். இதனால், விதைப்பைகளுக்கு ரத்தவோட்டம் பாதிப்பதால், விந்தணு உற்பத்தி பாதித்து எண்ணிக்கையும் தரமும் குறையும். இப்பிரச்னை உள்ளோர் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.

error: Content is protected !!