News August 30, 2024
சட்டம் அறிவோம்: பெண்களை கைது செய்வதற்கான விதிகள்

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46இன் படி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களை கைது செய்து, காவலில் வைக்க முடியாது. அவரச வழக்காக இருந்தால் மட்டுமே, இந்த நேரத்தில் கைது செய்யலாம். அதுவும் மாஜிஸ்திரேட்டிடம் முன் அனுமதி பெற வேண்டும். பெண் போலீஸ் மட்டுமே, குற்றம்சாட்டப்பட்ட பெண்களை கைது செய்ய முடியும். பெண் போலீஸ் இல்லாத சூழலில், ஆண் அதிகாரி கைது செய்தால், அவரை தொடக் கூடாது. Share it. <<-se>>#Law<<>>
Similar News
News July 8, 2025
கவுண்டி சாம்பியன்ஸ் லீக்கில் தமிழக வீரர்

2025 IPL சீசனில் குஜராத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் சாய் கிஷோர். இவரை Surrey அணி கவுண்டி சாம்பியன்ஷிப் லீக்கின் 2 போட்டிகளுக்காக எடுத்துள்ளது. இந்த குறுகியகால ஒப்பந்தத்தின்படி, Yorkshire & Durham ஆகியவற்றுக்கு எதிராக விளையாடவுள்ளார். Yorkshire அணியில் CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இடம்பெற்றுள்ளார். மேலும், தான் Surrey அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அடைவதாக ருதுராஜ் தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
விஜய்க்கு அடுத்து தனுஷ்.. H வினோத் Next move

H வினோத் தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை எடுத்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வரவுள்ளது. இந்நிலையில், இப்படம் ரிலீஸான உடனேயே அடுத்த படத்தை தொடங்க வினோத் திட்டமிட்டுள்ளாராம். இதன்படி, தனுஷை வைத்து இயக்கவுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இப்படத்தை தயாரிக்க, சாம் CS இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவுண்டட் ஸ்கிரிப்டும் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாம்.
News July 8, 2025
நாடு முழுவதும் நாளை பந்த் அறிவிப்பு!

மத்திய அரசை கண்டித்து நாளை(ஜூலை 9) நாடு தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் சார்ந்த தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பஸ், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை பஸ்கள் இயக்கத்தில் பாதிப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.