News August 30, 2024
திருச்சி என்ஐடி விவகாரம்: நிர்வாகம் வருத்தம்

திருச்சி என்ஐடியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக என்ஐடி நிர்வாகம் தற்போது வருத்தம் தெரிவித்து விளக்கமளித்துள்ளது. இதில் என்ஐடி நிர்வாகம், இனி இப்படி ஒரு சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு அதிகாரிகள் பணிசெய்ய அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
Similar News
News August 16, 2025
திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரிப்பு

திருச்சி ரயில்வே கோட்டத்தில் வருவாய் அதிகரித்துள்ளதாக டி.ஆர்.எம் பாலக்ராம் நேகி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ரயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு ஏப்ரல்-1 முதல், ஜூலை-31 வரை பயணிகள் பயணம் செய்த வகையில் ரூ.187.46 கோடியும், சரக்கு அனுப்பிய வகையில் ரூ.318.94 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட அதிகம்” என தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
திருச்சி: வீட்டு வசதி வாரியம் சலுகை அறிவிப்பு

திருச்சி மாவட்ட வீட்டு வசதி வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகளில் ஒதுக்கீடு பெற்று 2015 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப்பெற ஒதுக்கீடுதாரர்கள் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
திருச்சி: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விடுமுறை தினத்தில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத 95 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.